இந்நிகழ்விற்கு கல்வி, ஊடகம் மற்றும் அரச துறை சார்ந்த பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் எஸ். நியாஸ், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகையின் இணை ஆசிரியர் ஏ.எம். ஜவ்பர், தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் உதவி நிர்வாக உத்தியோகத்தர் சஞ்சலா சுபாஷிணி அத்துக்கோரல, சாரவிட்ட இணையதளத்தின் பொறுப்பாசிரியை சஞ்சீவிகா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், அமைப்பின் பணிப்பாளர் மரியம், ஒருங்கிணைப்பாளர்களான ஏ.எஸ். அர்ஹம் சுலைமான், ஆகிப் மொஹமட், மாணவர்களின் பெற்றோர் மற்றும் அழைப்பாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
அதன்படி,
தர்மராஜா தனசீலன் – நுவரெலியா
ஏ. டனூசிஜா – மட்டக்களப்பு
எம்.எஸ்.எப். சமீரா – புத்தளம்
எம்.எச்.எப். மிப்லா – திஸ்ஸமஹாராம
ஆர்.எம்.எப். சாதீகா – படல்கும்பர
ஆகிய மாணவர்கள் புரவலர் ஹாஷிம் உமரின் கரங்களால் மடி கணினிகளை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள், இன்றைய டிஜிட்டல் கல்வி சூழலில் மடி கணனி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாக விளங்குவதாகவும், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்தகைய உதவிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
ஹாஷிம் உமர் பௌண்டேசன் கடந்த ஆண்டுகளாக கல்வி, சமூக நலன் மற்றும் மனிதாபிமான சேவைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன், எதிர்காலத்திலும் இந்த மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.






0 comments :
Post a Comment