சாய்ந்தமருது அல்ஹிலாலில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கும் வரவேற்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
ம்முறை (2024) தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் 50 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளனர்.

இம்மாணவர்கள் அனைவரும் அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற காலை ஆராதனை நிகழ்வின்போது அறிமுகம் செய்யப்பட்டு, வாழ்த்தி வரவேற்கப்பட்டனர்.

இப்பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 231 மாணவர்களில் 168 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 219 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பெறுபேறுகளின் பிரகாரம் இப்பாடசாலை சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன் கல்முனை கல்வி வலயத்திலும் முன்னிலையில் திகழ்கிறது.

இதன் மூலம் இப்பாடசாலை வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியிருப்பதாக பாடசாலை சமூகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இச்சாதனை பெறுபேற்றினை அடைவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்த பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் உட்பட பிரதி மற்றும் உதவி அதிபர்களுடன் மாணவர்களுக்கு போதித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :