அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆளும் அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நடாத்திய ஊடக சந்திப்பில் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோர் இணைந்து தெரிவித்தனர்.
இவ் ஊடகச் சந்திப்பு பாண்டிருப்பிலுள்ள சமூக செயற்பாட்டாளர் இரா.பிரகாசின் இல்லத்தில் அவரது ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்றது.
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நடாத்துவது தொடர்பில். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..
அம்பாறை மாவட்ட மாவீரர்பணிக்குழுவில வந்து நாங்கள் 12 உறுப்பினர்கள் இருக்கின்றோம் .
கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தல நிகழ்வுகளை நாங்க சிறப்பாக கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பல தடைகளுக்கு மத்தியில் நடாத்தி வந்தோம்.
அந்த வேளையில் சில அரசியல்வாதிகள் அழையாமல் வந்து இந்த நிகழ்வை நாங்கள் தான் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து சைக்கிள்காரர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை வந்தடைந்து இதனை செய்வார்கள்.
கடந்த வருடம் ஒரு நபரை ( பிரபா) வைத்து இந்த மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலை குழம்பினர். அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
27ஆம் தேதிநினைவேந்தல் செய்வதற்கு சிரமதானம் செய்து ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே இந்த அரசியல் கட்சிகள் வந்து பொய்யான அரசியல் பிரச்சாரங்கள் செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் .
உங்களுக்கு தெரியும் இந்த கார்த்திகை மாதம் என்றாலே எங்களுக்கு ஞாபகம் வரும் கார்த்திகை 27 இது எக்காலத்திலும் எத்தனை தலைமுறைகள் வந்து போனாலும் எத்தனை மாதங்கள் நாங்கள் கடந்து சென்றாலும் எங்களது நெஞ்சில் ஆறாத வடுவாக எங்களது உள்ளத்தை போட்டு குடைந்து கொண்டு வருத்திக்கொண்டு எங்களை தினம் தினம் எங்களை வேதனைப்படுத்தி கொண்டு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் விடயம் .எங்களது மாவீரர்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்கள் .
எங்களது மண்ணுக்காக தமிழ் இனத்திற்காக உங்களது தமிழ் அது வாழ்வியல் மொழி வழி தேசியம் இருப்பு போன்றவற்றை பாதுகாப்பதற்காக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் எங்களது அண்ணனாக தம்பியாக எங்களது சகோதரிகளாக நாங்கள் இழந்திருக்கின்றோம்.
இந்த மண்ணுக்கு விதையாகி இருக்கின்றார்கள் .ஆகவே இந்த மாவீரர் துயில்கின்ற இடத்தில் மாவீரர் நினைவு நாளான கார்த்திகை 27 அண்மையில் வர இருக்கின்றது.
இதனை அம்பாறை மாவட்டத்தில் வழி நடத்துவதற்கும் இதனை சிறப்பாக நடத்துவதற்கும் எங்களது மக்களுக்கு தலைமை தாங்குவதற்கும் மாவீரர் துயிலுமில்ல பணிக்குழு தலைவர் செயலாளர் அதாவது நாங்கள் இருக்கின்றோம். கடந்த ஏழு எட்டு வருடங்களாக செய்கிறோம்.
ஆகவே இந்த மாவீரர் தினமானது ஒவ்வொரு வீடுகளிலும் எங்களது தமிழ் உள்ளங்களிலும் அன்றைய நாள் ஒரு எழுச்சி நாளாக எங்களது உறவுகளுக்கு நாங்கள் ஒரு அனுதாபத்தையோ அஞ்சலியையோ நாங்கள் வீடுகளில் இருந்தாவது செய்ய வேண்டும் .
இந்த வருடமும் நாங்கள் அந்த ஏற்பாடுகளை செய்வதற்கு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் அந்த புண்ணிய பூமியில் எங்களது தமிழ் இறந்த உறவுகள் எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம். மக்களாக எங்களோடு ஒன்று சேருங்கள். என்றார்.
0 comments :
Post a Comment