எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள கல்முனை நாகூர் ஆண்டகை தர்ஹா (கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்) 203வது வருடாந்த கொடியேற்ற பெருவிழாவின் திட்டமிடல் தொடர்பாக அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைப்பு கூட்டம் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி அவர்களின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இத்திட்டமிடல் கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அசீம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்சீன் பக்கீர், பொது சுகாதார வைத்திய அதிகாரி, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிரதிநிதிகள், கடற்படை ஆகிய பல அரச நிறுவனங்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்கள், கல்முனை முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு இவ் வருட கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்த ஏதுவாக திட்டமிடல்களை மேற்கொண்டனர்.
0 comments :
Post a Comment