கல்முனைப் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 28 வருடங்கள் வினைத்திறன் மிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர் யூ.எல்.சமட் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் மன்றத்தின் தலைவர் ஐ.எல்.அர்சுத்தீன் தலைமையில் நேற்று(12) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கௌரவ அதிதிகளாக கணக்காளர் கே.எம்.எஸ்.அமீர் அலி சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களும், அதிதிகளாக கருத்திட்ட முகாமையாளர் ரஞ்சன்,
வங்கிகளின் முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள்,சக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,யூ.எல் சமட் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment