திருகோணமலை மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தி இம் முறை அமோக வெற்றி பெறும்_தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் எம்.ஈ.முஹம்மது ராபிக்



ஹஸ்பர் ஏ.எச்-
ம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை காணும் என திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் முஹம்மது ராபிக் தெரிவித்தார்.

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் இன்று (26) இடம் பெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இப் பகுதி மக்கள் காணிப் பிரச்சினை கடல் தொழில் பிரச்சினை என பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர் இதற்காக காணிக்கான தனியான ஆணைக்குழு அமைத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு வழங்கப்படும். மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்பி ஜனாதிபதிக்கான ஆணையை வழங்கியுள்ளார்கள் அது போன்று இம் முறை பாராளுமன்றத்திலும் ஆட்சி அமைக்கக் கூடிய பலத்தை மக்கள் நிச்சயமாக வழங்குவார்கள் அரசியலில் ஜாம்பவான்கள் என கூறிய பலர் சுமாராக 96 முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இந்த தேர்தல் போட்டியிடாது விலகியுள்ளார்கள் இவர்கள் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் அரசியல் வியாபாரம் செய்யவோ திருடவோ முடியாது என்ற எண்ணத்தில் விலகியுள்ளார்கள் இது புதிய பாராளுமன்றத்தின் பலத்தை எமக்கு காட்ட உதவும் .கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :