ஒஸ்கார் ஏற்பாட்டில் வாணி விழா கற்றல் உபகரணங்கள் வழங்கல்



வி.ரி.சகாதேவராஜா-
வுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியம் (ஒஸ்கார்- AusKar ) ஏற்பாடு செய்த வாணி விழாவுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு சித்தர் கல்வியகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு கலைமகள் சனசமூக நிலையத்தில் சித்தர் கல்வியகத்தலைவர் மு.துஸ்யந்தன் தலைமையில் நேற்று முன்தினம்(12) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொதுச் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் அகிலன் நடேசன் கலந்து சிறப்பித்தார்.
விழாவில் ஒஸ்கார் அழைப்பின் பேரில் கௌரவ அதிதிகளாக ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி .ரி. சகாதேவராஜா ,எந்திரி எஸ்.பிரதீபன் மற்றும் சிறப்பு அதிதிகள், ஒஸ்கார் கள செயல்பாட்டு குழு உறுப்பினர்கள்,காரைதீவு .ஒர்க் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஒஸ்கார் அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான ஒஸ்கார் குடும்ப உறுப்பினர்கள் இக் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்திருந்தனர்.
என்றும் கல்வி செயற்பாடுகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் அளிக்கும் ஒஸ்காரின் அணுகுமுறையின் ஓர் சிறப்பம்சமாக இம்முறை ஒஸ்கார் இந்த வாணிவிழா கொண்டாட்டத்தை சித்தர் கல்வியகத்தோடு இணைந்து நடாத்தியது என்று ஒஸ்கார் அமைப்பின் செயலாளர் திருச்செல்வம் லாவண்யன் தெரிவித்தார்.

இதன்போது சித்தர் கல்வியகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒஸ்கார் பாடசாலை உபகரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கும், அனுசரணை வழங்கிய ஒஸ்கார் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒஸ்கார் அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ராஜன் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :