ப. நான் சிவப்பிரகாசம் மயூரன் ( B.Sc. Eng, (Hons) University of Moratuwa, ACCA, CMA (USA) CIMA Affiliate , CII )பிறந்த இடம் மிசாலை, சாவக்கச்சேரி யாழ் இந்துக் கல்லுாரியில் கனிதத்துறையில் உயர்தரம் கற்று 2005 க.பொ.த.உயர் தரத்தில் அகில இலங்கை ரீதியில் கணிதத்துறையில் முதலாவது இடம் பெற்றேன்.
எனது இசட் ஸ்கோர் 3.2884 இதுவரை 18 வருடங்களாக அந்தப் புள்ளியை இதுவரை எவரும் முறியடிக்கவில்லை. நான், மொரட்டுவை பல்கழைக்கழகத்தில் இலக்ரோனிக் டெலிக்கொமினிக்கேசன் பொறியியலாளராக கற்றேன். அங்கு கற்கும்போதே இரண்டு வருடத்திற்குள் சி.ஜ.எம்.ஏ (பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முகாமைத்துவ கணக்காளர் (லன்டன் ) பரீட்சையில் சித்தியடைந்தேன்.
அதன் பின்னர் கணக்கியல் துறை பல்வேறு நிறுவனங்களில் விரிவுரையாளராக கடமையாற்றினேன். அத்துடன் கணக்கியல் பகுதி நேர விரிவுரையாளராக இந்தியா, மாலைதீவு, கட்டார், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கும் சென்று விரிவுரையாற்றுகின்றேன். அதுக்கு பிறகு கணக்கியல் துறையில் ஏ.சி.சி.ஏ, சி.எம்.ஏ (ஜக்கிய அமெரிக்கா) சி.ஜ.ஜ. காப்புறுதி நிதி போன்ற பட்டங்களையும் பெற்றேன். தற்பொழுது பஹ்ரைனில் உள்ள கணக்கியல் சம்பந்தமான தனியார் பல்கலைக்கழகத்தில் நிதி கணக்கியல் பகுதிக்கு தலைவராக கடமையாற்றுகின்றேன்.
கே. தற்பொழுது யாழ்ப்பாணத்தில் தேர்தலில் குதிப்பதன் நோக்கம் என்ன?
நான், யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஆர். அர்ச்சுனா தலைமை வேட்பாளர். அவர் எனது பாடசாலையில் மாணவத் தோழன். அவருடன் இணைந்து நாங்கள் சுயேட்சைக் குழு 17, எங்களது சின்னம் மருந்து ஏற்றும் ஊசி,9 பேர் யாழ் கிளிநொச்சி சேர்ந்த மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றோம் தனது விருப்பு வாக்கு இல 8 ஆகும்.
கே. உங்களைப்பற்றி மக்கள் அறிந்துள்ளார்களா? உங்களது தேர்தல் பிரச்சாரம் யாழ் மக்களிடம் எவ்வாறு சென்றடைந்துள்ளது.
ப. டொக்டர் ராமநாதன் அர்சுனன் அவர்கள் ஊழல்களுக்கு எதிராக எழுந்து குரல் கொடு்த்தார். பல பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள். வைத்தியசாலைகளில் நடைபெறும் ஊழல்களையும் அவர் வெளியில் கொண்டு வந்தார். அதன் பின்னால் பல மக்கள் அவருடன் அலை அலையாக ஒன்று சேர்ந்தது கொண்டனர்.
அதே போன்று பாராளுமன்ற பிரநிதியாகி அவர்கள் மக்களது பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக நாங்கள் சுயேற்சையாக ஒர் அனி ஒன்று திரண்டு இருக்கின்றோம். ஏற்கனவே அந்த மக்களது பிரநிதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் வாக்களித்த மக்கள் எவ்வித வேலையுமே அங்கு செய்ய வில்லை. தேர்தல் காலத்தில் மட்டும் அவர்கள் வெறுமனமே கோஷங்களை எழுப்பி பாராளுமன்ற உறுப்பினர் வேறு சிலர் அமைச்சர்களாகின்றனர். ஆனால் சாதாரன ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித அரசியல் பலம் சேவைகள் அவர்களது பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.
மக்களின் வாழ்வதாரப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் நிறையப்பிரச்சினைகள் அங்கு உள்ளன. முன்னைய பா.உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் மைக்கைப் பிடித்து பெரிய கதைகள் கதைக்கின்றது ஒழிய மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதான் எங்களது மையக் கருப்பொருளாகும். அரசியல் சார்ந்த தமிழ் தேசியம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கத்தான் போகின்றது. அதனையும் நாங்களும் பேசத்தான் போகின்றோம். அதில எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.அதனைக் கதைக்கின்ற நேரத்தில் ஏன் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முடிவு காணக்கூடாது? ஏன் மக்கள் பிரநிதிகளாக இருந்தவர்கள் அதனை செய்வதில்லை இங்கே இருக்கின்ற மக்களைவிட புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது ஒரு பாரிய பிரச்சினை அவர்களும் மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். அந்த உதவிகள் சின்னதாகப் போகின்றது ஒழிய அங்கு வாழ் மக்களது பிரச்சினைகள் நிரந்தரமாகச் செய்வதற்கும் பொருளாதாரத்தினை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அதனை மேலே கொண்டு வருவதற்கு ஒர் நிரந்தர கட்டமைப்பு அங்கு இல்லை.
கே. அங்கு ஏற்கனவே தமிழரசுக் கட்சி, ரீஎன்.ஏ, ஈ.பி.டி.பி போன்ற பல கட்சிகள் அங்கு உள்ளன பெரிய கட்சிகள் அங்கு தேர்தல் குதிக்கின்ற வேலையில் உங்களது சுயாதீன வேட்பாளருக்கு ஆகக் குறைந்தது ஓர் பாராளுமன்ற உறுப்பினராவது எடுக்க முடியுமா ?
ப. மத்தியில் ஓர் ஆட்சி மாற்றம் வந்திருக்கின்றது. இதோட நாடளாரீதியில் மக்கள் புதிய இளைஞர்களை படித்தவர்களை மக்கள் எதிர்பாக்கின்றனர். இதுவரை ஏமாற்று அரசியல் செய்து கொண்டிருந்த எங்களது அரசியல்வாதிகளை புறம் தள்ளுகின்ற மனப்பாங்கு மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அது நல்ல விஷயம். இதுவரை காலம் எப்படி இருந்தது என்றார் புள்ளடி போட்டால் வீட்டுக்கு அல்லது சைக்களுக்கு ,வீனைக்கு போரது என்ற குறிப்பிட்ட மனப்பாங்கிலேயே மக்கள் இருந்தனர்.கட்டியான நிரந்த வாக்கு வங்கிகள் எனச் சொல்வார்கள். இப்ப இந்த வாக்கு வங்கி நல்லா குறைந்து இவரகள் ஒருத்தரிடமே எமக்கு நம்பிக்கை இல்லை. யாராவது புதிதாக வந்தால் அவர்களுக்கு ஒர் சர்ந்தப்பத்தினை கொடுதது பார்க்கலாம் என்ற மனப்பாங்கு மக்களுக்கு வந்துள்ளது. இந்த இடத்தில் தான் ஓர் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தினை நாங்கள் நிரப்பி மக்களுக்கு சரியான பாதைகளை காட்டுவதற்கு தேர்தலில் குதித்துள்ளோம். அடுத்து அடுத்து அரசியல்வாதிகளுக்கு முன் உதாரணமாக இருத்தல் வேண்டும். என்றும நாங்கள் ஆசைப்படுகின்றோம்.
கே. மக்கள் மத்தியில் உங்களை எவ்வாறு வரவேற்கின்றார்கள் ஆதரவு இருக்கின்றதா?
ப.நிறைய வரவேற்பு உள்ளது.நாங்கள் கூட்டங்களுக்குபோகும்போது. மக்களது காலடியில் போகும்போது எங்களது குழுவை தெரியாத ஆட்கள் இல்லை. டொக்டர் அர்ச்சுனா என்றால் சகலருக்கும் தெரியும். எங்களை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள். அவர்களது பிரச்சினைகளை எங்களிடம் மனம் விட்டு கதைக்கின்றார்கள். வாழ்வாதாரம், பாதை அபிவிருத்திகள் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் எங்களிடம் சொல்கின்றனர். எங்களுடன் ஒர் நம்பிக்கை வைத்துத் தான் இதனை எங்களிடம் கூறுகின்றனர்.
கே. கடந்த 3 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்ததினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ரீதியாக உங்களது குழு எவ்வாறான தீர்வுகளை அம் மக்களுக்கு வழங்கப் போகின்றது ?
ப. இந்த நாடு பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தான் சிறுக சிறுக முன்னேறிக் கொண்டு வருகின்றோம். அந்த வகையில் தான் வெளிநாட்டு நேரடி முதலீடு தேவைப்படுகின்றது. டொலர் எமது நாட்டுக்குள் வருவதற்கு கட்டாயம் மத்தியில் இருக்கின்ற அரசங்கம் அதனைக் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அவர்களோடு நாங்களும் நின்று சர்ந்தரப்பத்தினை பாவித்து நாங்கள் நிறைய முதலீடுகளை வடக்கு கிழக்குக்கு கொண்டு வரமுடியும்.
அது புலம் பெயர் சமுகத்திற்குள்ளாக எடுக்கலாம். வேறு கட்டமைப்புககுள் ஊடகவும் எடுக்க முடியும். வாய்ப்புக்கள் நிறைய உண்டு.முதலிடுவதற்கு நிறைய முதலீட்டாளார்கள் உள்ளனர்.அதனை இணைப்படுத்தலுக்கு ஓர் ஓழுங்கானவர்கள் எம் மத்தியில் இல்லை. ஏன இதனைச் சொல்கின்றேன்.. எமதுக்கு வடக்கிழக்கு மாகாண சபை முதன்முதலாக தரப்பட்ட காலத்தில் அந்த மாகாணசபைக்கே அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு பயண்படுத்த கொடுத்த நிதி செலவழிக்காமல் அந் நிதி மீண்டும் மத்திய அரசுககுச் சென்றதாக நாம் கண்டோம்.
இப்படிப்பட்டவர்கள் அந்த மக்களுக்கு செலவழிக்காதவர்கள் புதிதாக என்ன திட்டங்களை வகுத்து இவர்கள் சேவைசெய்யப் போகின்றார்கள் ? என நிறைப்பது முட்டாள் தனம்.கிடடத்தட்ட வினைத்திறன் இல்லாத அரசியல்வாதிகள் தான் எங்களை கடந்த காலத்தில் பிரநிதிப்படுத்துகின்றார்கள். அவ்வாறவானவர்கள் ஓய்வு எடுத்தல் வேண்டும். நாங்கள் நல்ல அரசியலைக் செய்து காட்டினோம் என்றால் அடுத்த அடுத்த வாருகின்ற சந்ததிக்காவது ஒர் நல்ல உதாரணமாக நாங்கள் இருக்க முடியும்.
நாங்கள் எங்களுக்கு அரசியல் தான் வரவேண்டும் என நாங்கள் நினைத்தில்லை இப்போதுதான நாங்கள் இறங்கிவிட்டோம். கடந்த 2009 போரட்டம் முடிந்த பிறகு 15 வருடமாக மக்கள் ஏமாந்து தான் உள்ளனர். இதனால் மக்கள் தாங்களாகவே உடைந்து போய்விட்டார்கள். தற்பொழுது சிரேஸ்ட அரசியல்வாதிகளது பெயர்களைச் சொல்லி இவர் வரக்கூடாது இப்படியான கோசங்கள் வருகின்றது. இதனை பழைய அரசியல் வாதிகள் உணர்ந்து விடடார்க்ள. இப்படி மனநிலை வந்து விட்டது சனததிற்கு வெறுப்புத்தான் இதே போன்று தான் ்கொழும்பில் நடைபெற்ற அரகலை மக்கள் போரட்டம் அத மாதிரி அரசியல் சூழ்நிலைதான் மக்கள் மனங்களில் வந்துள்ளது. பழைய கட்சிகள் பழைய பலலவிகளை பாடிக் கொண்டு வாரது இனி அங்கு ஒருபோதும் எடுபடாது. அது எங்களுக்கு ஒரு பெரிய சந்தர்ப்பத்தினை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அதனைப் பயண்படுத்தி அதனை அழகாக செய்து காட்டுவோம் என்றார்.
யாழ்ப்பாணத்தில் 6 பாராளுமன்ற உறுப்பிணருக்காக 23 பதிவு செய்யப்டப்ட கட்சிகள் 21 சுயேட்சைக் குழுக்களும் யாழ் மாவடடத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment