மு.கா கட்சி செயற்பாடுகளில் புதிய இளைய தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக ஆலோசனை !



மாளிகைக்காடு செய்தியாளர்-
டைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த இறக்காமம், மாளிக்காடு, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் குழுக்களுடன் விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.

கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றிக்கு கடின உழைப்புடன் செயற்பட்ட தேர்தல் குழுக்களுக்கும், இறக்காமம், மாளிகைக்காடு, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சியின் தலைவர் சார்பிலும், கட்சி சார்பிலும் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர் கொள்வதற்கான திராணியை வளர்த்துக்கொள்வது டன் எமது கட்சி செயற்பாடுகளில் புதிய இளைய தலைமுறையினருக்கு முன்னுரிமை வழங்கி கட்சி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான எம் எஸ் உதுமாலெப்பை, கட்சியின் உச்ச பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சி.சமால்தீன், கட்சியின் உச்ச பீட உறுப்பினரும், இறக்காம பிரதேச ஜனாதிபதி தேர்தல் குழுவின் தலைவருமான யூ.எல்.ரியாஸ் ஆசிரியர், இறக்காம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.முஸ்னி, கிளை தலைவர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் , மாளிகைக்காடு பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில், நற்பிட்டிமுனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் யூ.எல்.தௌபிக், மத்திய குழுவின் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜௌபர், கிளைக் குழுத்தலைவர்களான எம்.எம்.ரியாஸ், பி.எம்.மக்பூல், ஐ.எம்.ரிபான், எம்.ஐ.நிரோஸ், யூ.எல்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :