வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்ஷவம் நேற்று காலை பெற்றது.
ஆலயத்தில் காலை 6 மணி அளவில் திருப்பொற்சின்னம் இடித்து பிரதம குரு சிவஸ்ரீ மு கு. சச்சிதானந்த குருக்கள் ஆலய குரு சிவசிரி சபாரெத்தினக்குருக்கள் கிரியைகளின் பின்னர் ஏழு முப்பது மணி அளவில் ஊர்வலமாக தீர்த்தக்குளத்துக்கு சென்றனர்.
ஆலயத்திலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள "சாமிரவில்லு" என அழைக்கப்படும் தீர்த்தக் குளத்தில் காலை 8 மணி அளவில் சிவன் உறை சிவகாமி விசேட பந்தலில் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாடினர்.
அதை தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் தீர்த்தம் ஆடினார்கள்.
0 comments :
Post a Comment