சீரற்ற காலநிலை - மக்களுக்கு தேவையான உதவிகளும், ஏற்பாடுகளும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து முன்னெடுப்பு - பாரத் அருள்சாமி



க.கிஷாந்தன்-
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலுக்கமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவகர்கள், பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள், தோட்ட நிர்வாகத்தினர் ஆகியோருக்கு உரிய முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.

இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதும், அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அனர்த்த அபாயம் இருப்பின் அது தொடர்பில் பெருந்தோட்ட நிதியத்துக்கு அல்லது கிராம சேவகருக்கு அல்லது தோட்ட அதிகாரிக்கு அறிவிக்குமாறும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற காலநிலை தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :