கல்முனை பிரதேசத்தில் துறைசார் அதிகாரிகளின் ஆலோசனை பெறப்படாமல் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்குகள் துருப்பிடித்து இறந்து அழிகின்றது.



எம்.எம்.றம்ஸீன்-
ல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளிலுள்ள கடற்கரை பிரதேங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்குகள் மக்களின் பாவனைக்கு உதவாத வகையில் துருப்பிடித்து இறந்து அழிந்து வருகின்றன.

அனுபவமுள்ள விளையாட்டு அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப்பெறாமல் பிரதேச இளைஞர்களை திருப்திப்படுத்துவதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதிப்பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்ட இந்த பார்வையாளர் அரங்குகள் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையிலேயே துருப்பிடித்து அழிந்து வருவதாக பொதுமக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் கட்டாக்காலி மாடுகள் தங்குமிடமாக மாறியுள்ளதுடன் விளையாடுவதற்கு பொருத்தமற்றதாகவும் காணப்படுகின்றது.

சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் பலவருடங்களாகியும் பூர்த்தியடையாத நிலையில் நீச்சல் தடாகமொன்று புற்கள் வளர்ந்து பற்றைக் காடாக காணப்படுகின்றது.

தற்போது கடற்கரைப் பிரதேசத்தில் பலத்த காற்று வீசுவதால் பார்வையாளர் அரங்கின் துருப்பிடித்த கூரைத் தகடுகள் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மீது தூக்கி வீசப்படலாம் என்ற அச்சமும் பிரதேசவாசிகளிடம் நிலவுகின்றது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனர்த்தமொன்று நிகழ்வதற்கு முன் பொதுமக்களை பாதுகாக்குமாறு கேட்டுள்ளனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :