அலிகம்பை பிரதேசத்தில் தொண்டு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் சுகாதாரத் தேவைகளுக்காக கையளிப்புநூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டம், அலிகம்பே பிரதேசத்தில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றினால் சுமார் 25 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று அப்பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்காக சுகாதார திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், அலிகம்பை கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை எஸ்.ஜெகநாதன், பிராந்திய திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், டொக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ். ஷாபி, பிராந்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி பீ.அகிலன், பனங்காடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சக்கீல் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட அப்பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அலிகம்பை பிரதேசத்தில் சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி மிகவும் கஷ்டத்துடன் அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் அங்கு பனங்காடு வைத்தியசாலையினால் வாரத்தில் மூன்று நாட்கள் கிளினிக் நடத்தப்பட்டு வருகிறது. ஏனைய நாட்களில் அங்குள்ள மக்கள் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று போன்ற தூரப் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சென்றே சுகாதார சேவையினைப் பெற்று வருகின்றனர்.

அலிகம்பை கத்தோலிக்க தேவாலய அருட்தந்தை எஸ்.ஜெகநாதன், மற்றும் அங்குள்ள பொது நிறுவனங்கள் நிரந்தரமான வைத்தியசாலை ஒன்றினை அப்பிரதேசத்தில் நிர்மாணித்து தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட கட்டிடம் ஒன்றும் அதற்குரிய தளபாடங்களும் சுகாதார திணைக்களத்திற்கு கிடைத்திருப்பது எதிர்காலத்தில் அங்கு நிரந்தரமான வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

அலிகம்பை பிரதேசத்தில் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் எதிர்வரும் காலங்களில் வைத்தியசாலை ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :