ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளை புனரமைப்புக் கூட்டம் இன்று (24) சம்மாந்துறை விளினியடி கிராமம் 02 இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ. மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ.சமால்டீன், அரசியல் அதி உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி சஃபிர், சம்மாந்துறை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீர் அட்டாளைச்சேனை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். நஸீர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment