முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்களே, முஸ்லிம் சமூகத்தின் முதலாவது சாபக்கேடு!எக்ஸத் ஊடகப் பிரிவு-
னநாயகத்தின் 4தூண்களில் ஒன்று ஊடகம்!ஒரு அச்சு ஊடகத்தை உருவாக்க துப்பில்லாத சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகம் இருக்க,இந்த முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்களாக நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கில் இருக்கும் ஊடகவியலாளர்கள்,ஊடகவியல் என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பந்தா காட்டி,வெட்கம் கெட்டு திரிகிறார்கள்.

ஊடகவியல் என்பது மிக கணதியானது,மக்களின் குரலாக ஒலிப்பது!ஆனால் முஸ்லிம் சமூக ஊடகவியலாளர்களுக்கு ஊடகவியல் பற்றிய எந்த அறிவும் கிடையாது, அது தொடர்பான தேடலும் கிடையாது ,ஆனால் இவர்கள் ஊடகவியலாளர்கள்!
மரணச் செய்தி எழுதுவதும்,விளம்பரம் எழுதுவதும்,விபத்து நடந்தால் எழுதுவதுமே ஊடகவியல் என நினைத்துக் கொண்டு நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் கூட்டமாக முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமூக மானத்தை மற்ற சமூகங்களிடையே கப்பலில் ஏற்றுகிறார்கள், மற்ற சமூகங்கள் இவர்களின் ஊடகவியலை எள்ளிநகையாடுவது கூடத் தெரியாமல் ஆளுக்கொரு போரம்,ஊருக்கு ஐந்து சங்கம் என ,எம்பி மாருக்குப் பின்னால் குசு குடிப்பதற்கும் சங்கம் நடத்துகிறார்கள்!

சமூக அரசியல் பற்றி,பொருளாதரம் பற்றி,வேலை வாய்ப்பின்மை பற்றி ஒரு அறிக்கை தயாரிக்க,ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்க வக்கற்றவர்களாக,அறிவற்றவர்களாக 99%மான ஊடகவியலாளர்கள் இருப்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் சாபக் கேடாகும்.

இக்பால் அத்தாஸ். .பாரூக் சியான், போன்ற முஸ்லிம் சமூகத்தின் சிறந்த ஊடகவியலாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்,ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலாத்தும் இந்த வெக்கம் கெட்ட செய்தி சேகரிப்பவர்கள் தமக்கு எவ்வளவு அறிவு தலைக்குள் இருக்கிறது என்பதை கணக்குப் பார்த்து காரியமாற்ற வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :