நிந்தவூர் SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே தரப்படுத்தல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வு



எம்.எம்.றம்ஸீன்-
நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் கராத்தே தரப்படுத்தல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு அம்பாறை மாவட்ட SKMS கராத்தே பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் எம்.ரீ.அஹமட் நிம்ஷி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கல்முனை இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் அதிகாரி மேஜர் ரூவன் மற்றும் SKMS பாடசாலையின் தலைவரும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியருமான சிஹான் எம்.எஸ்.வஹாப்தீன் மற்றும் கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டு ஊக்குவிப்பாளரும் சமூக சேவையாளரும் கல்முனை பெஸ்டர் நிறுவனத்தின் உரிமையாளருமான ஏ.எம்.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கௌரவ விருந்தினர்களாக அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அஹமட் ஹுஸைன் மற்றும் கிழக்கு மாகாணத்தின் USKU பிரதிநிதியும் சுஹாரி சோட்டோக்கன் கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாருமான என்.ஸதாம் மற்றும் சுஹாரி கராத்தே சங்கத்தின் கராத்தே ஒருங்கிணைப்பாளர் ஏ.ஸி.எம்.பிர்னாஸ் ஆசிரியர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர் .

இந்நிகழ்விற்கு SKMS பாடசாலையின் நிந்தவூர் பிராந்தியம் மற்றும் பொத்துவில் பிராந்தியங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தரப்படுத்தல் நிகழ்வில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடந்த காலங்களில் கராத்தே போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு அதிதிகளினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதும் சிறப்பம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :