கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை நடைமுறைப் படுத்தப்பட்டு மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன் இடம் பெற்று வெற்றி பெற்று தெரிவான மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு உத்தியோகபூர்வமாக சபாநாயகர் எம்.முன்ஷிப் அஹம்மத் தலைமையில், செயலாளர் நாயகம் அதிபர் ஏ அப்துல் ரஹீம், பிரதி செயலாளர் நாயகம் ( நிருவாகம்) பிரதி அதிபர் எம். சி. முபாரக் அலி,பிரதி செயலாளர் நாயகம் (அபிவிருத்தி) எம். ஏ.சி. ஹனீரா உதவி அதிபர் மற்றும் பிரதி செயலாளர் நாயகம் (ஒழுக்கம்) என். எம்.ரஸ்மிஆசிரியர்,
மாணவர் பாராளுமன்ற (இணைப்பாளர்) ஆர்.பாத்திமா சிஹானியா
ஆகியோரின் முன்னிலையில் நேற்று (7) நடைபெற்றது.
இவ் அமர்வுக்கு விசேட அதிதிகளாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் சம்மாந்துறை வலய மாணவர் பாராளுமன்ற இணைப்பாளர் எச் நைறோஸ் கான் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு சங்க செயலாளர் வி.எம் முஹம்மட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் அமர்வினை பார்வையிடுவதற்காக பெற்றோர்கள் வருகை தந்திருந்திருந்தனர்.
மாணவர் பாராளுமன்றத்தில் 42 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர்,பிரதிசபாநாயகர்,பிரதமர், குழுக்களின் பிரதி தலைவர்,சபை முதல்வர்,உட்பட பத்து அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகமான அதிபர் முன்னிலையில் இதன் போது சத்திய பிரமாணம் செய்தனர்.
பின்னர் சபாநாயகர்,பிரதி சபாநாயகர், பிரதமர்,குழுக்களின் பிரதி தலைவர்,சபை முதல்வர்,உட்பட அமைச்சர்களின் உரைகள் இடம்பெற்றது.
மாணவர் பாராளுமன்ற விடயங்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து சிறந்த முறையில் சபையில் உரையாற்றியமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விடயமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர் பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை அவதானித்த,கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் குறித்த மாணவர் பாராளுமன்ற அமர்வினை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஒழுங்கமைத்தமைக்காக பாடசாலையின் சமூக விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களுக்கும் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் சம்மாந்துறை கல்வி வலயம் சார்பாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment