தேசியத்தில் Superior Engagement Award வென்ற ஓட்டமாவடி யஸீர் அறபாத்நீதியான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டமைப்பு (PAFFREL) ஏற்பாடு செய்த இலங்கையில் 'ஜனநாயக ஆட்சிப்பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்" இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை நோக்காகக் கொண்ட கற்கைநெறி மற்றும் சமூக வலைத்தளப்போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு-07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக்கல்லூரி வளாகத்தில் (SLFI) இடம்பெற்றது.

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சிய தூதர் போனி ஹார்பாக் தலைமையில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் அரச திணைக்கள உயரதிகாரிகள், நிறுவனத்தலைவர்கள், சிவில் சமூகத்தலைவர்கள், கல்வியியலாளர்கள், ஜனநாயக கல்விக்கூடத்தின் இளைஞர், யுவதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட "ஜனநாயகம் எமது மொழியில்" எனும் தொனிப்பொருளில் சமூக ஊடகம் வாயிலான தமிழ் மொழி எழுத்துப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடியைச்சேர்ந்த இளங்கலைமாணி பட்டதாரியான எம்.என்.முஹம்மது யஸீர் அறபாத் போட்டியில் பங்குபற்றியதற்கான சான்றிதழ், போட்டியில் இறுதி செய்யப்பட்டோர் பட்டியலில் தனது சமூக ஊடகப்பதிவு இடம்பிடித்தமைக்கான பதக்கம் என்பவற்றோடு, வெற்றியாளருக்கான Superior Engagement Award உயர்விருதினையும் வெற்றி கொண்டு 150,000 ரூபா பணப்பபரிசினையும் பெற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வில் வெற்றியாளராக பெயர் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உயர்விருதினைப்பெற மேடைக்கு வருகை தந்த போது, தற்போது பலஸ்தீன காஸா மக்கள் எதிர்கொண்டுள்ள துயரங்களை நினைபடுத்தவும் சுதந்திர பலஸ்தீனை ஆதரித்தும் பலஸ்தீன சால்வை அணிந்து, பலஸ்தீன உணர்வை யஸீர் அறபாத் வெளிப்படுத்தியமை அனைவரையும் கவர்ந்ததுடன்,கவனயீர்ப்பையும் பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :