திறமைமிக்கவரால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு



நாட்டின் நிதி கையிருப்பை அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததுள்ளது என ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நேற்று (09) குருநாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் 246 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசீல் வழங்குதல் ,364 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்,வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10000 பெறுமதியான சத்தோச வவுச்சர்கள் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் குருநாகலைச் சேர்ந்த ஜெயந்தி குருஉத்தும்பாலா ஆவார்.

அவரின் வெற்றிக்கு இந்த நிலம் உதவியது. எனவே 2048 வெற்றியின் பங்காளிகளை தேர்ந்தெடுப்பதற்காக இன்று குருநாகல் வந்துள்ளோம் .
பொருளாதார வீழ்ச்சி அடைந்த நம் நாட்டை மீட்டுக் கொள்வதற்காக .ஜயகமு ஸ்ரீலங்கா’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்தோம்.

நாட்டில் எரிபொருள் ,எரிவாயு வரிசைகளை இல்லாது செய்தோம் அந்த நேரத்தில் எம்மால் செய்ய முடியாது என்று சொன்னார்கள் ஆனால் நாம் மக்களை காப்பாற்றுவதற்காக கடினமான நேரத்தில் அரசை பெறுப்பேற்று சிறந்த முறையில் நாட்டை மீட்டுள்ளோம்

இந்த நாட்டு மக்களை வென்றெடுக்கும் புரட்சியை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இம் மக்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து மக்களை வெற்றிகொள்ளும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அதன் பயனாக வெளிநாட்டுத் தொழிலார்கள் 9.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் இதற்கு அனுமதி பெற்ற வெளிநாட்டு முகவர்கள் வழுச் சேர்த்துள்ளனர் எனவே எமது கையிருப்பு நிதியை அதிகரிக்க முடிந்துள்ளது . அதன் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் கையிருப்பு பணத்தை 14 சதவீதமாகஅதிகரிக்க முடிந்துள்ளது. ஆகவே வெளிநாட்டு தொழிலாளர்களை கௌரவிக்கவே தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றோம்.

குருநாக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிக பெண்கள் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு எங்கள் கௌரவத்தை மரியாதையும் அளிக்கின்றோம். என அமைச்சர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :