ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடுநூருல் ஹுதா உமர்-
க்கிய சமாதானக் கூட்டமைப்பின் பேராளர் மாநாடு மார்ச் 9, 2024 அன்று கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அக்பர் அலி (நாசார் ஹாஜி) தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் பொருளாளரும், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் கட்சியின் கணக்கு அறிக்கையை சமர்ப்பித்து கொழும்பில் தேர்தல் வாக்கு மூலம் ஜனநாயக ரீதியில் பேரம் பேசி எமது உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என கூடியிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கி உரை நிகழ்த்தினார்.

கட்சியின் செயலாளர் ஹசன் அலி அவர்கள் செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்து உரையும் நிகழ்த்தினார். மௌலவி சபீர் அவர்கள் இஸ்லாமிய அரசியல் என்ற தொனியில் உரை நிகழ்த்தினார்கள்.

கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஹிஸாம், கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான காதர் மற்றும் முஸம்மில் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரீப் மற்றும் பாயிஸ் ஆகியோர் கட்சியின் தலைமை மற்றும் உச்ச சபையில் இணைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :