நாதியற்றுப் போன சம்மாந்துறையின் அரசியலில், அடுத்தகட்ட நகர்வு என்ன..!!!



ம்பாறை மாவட்ட அரசியலில் சம்மாந்துறை என்பது பெரும் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும், அமைச்சர்கள் பலதையும் கண்டதொரு ஊராகும். ஏறத்தாழ சுமார் ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட ஊராகும். அத்தோடு தொண்ணூறு ஆயிரத்திற்கும் அதிகமாக வாக்குகளைக் கொண்டதொரு தொகுதியாகும். இவ்வாறானதொரு தொகுதியே இன்று அரசியல் அதிகாரமற்று அநாதையாய் கிடக்கின்றது. இத் துரதிஷ்ட நிலைக்கு தொகுதி மக்களை குற்றஞ்சாட்டுவதையும் தாண்டி, கடந்த காலங்களில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் தூர நோக்கில்லா நகர்வும், சுயநல அரசியல் நிலையுமே, இதற்கான பிரதானமான காரணமாகும். அன்வரின் அரசியலுக்குப் பின் ஊரை நேசித்து, ஒரு தூர நோக்குடனான சிந்தனையின் பால் சம்மாந்துறை மண்ணை திட்டமிட்டு வழிப்படுத்தக் கூடிய ஒரு ஆளுமை இல்லாத தலைமைகளாகவே காணப்படுகின்றனர். வருகின்ற அனைத்து தேர்தல்களையும் தாமே தான் களம் காண வேண்டும் என்ற அவாவும், வென்ற காலத்திற்குள் தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே தத்தமது, அரசியல் நகர்வுகளையே நகர்த்திச் செல்கின்றனர். உண்மையிலே இவ்வாறான நிலையின் எமதூரின் வளர்ச்சித் தன்மையை தாமே அழித்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.

இவ்வாறானதொரு நிலை வருகின்ற தேர்தலின் நிலைப்பாடு என்ன?

சம்மாந்துறை தொகுதியைப் பொறுத்தவரையில்,
மு.கா வானது மீண்டும் மன்சூரையே களம் காண வைக்கும். கடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை சம்மாந்துறை தொகுதி மன்சூருக்கு வழங்கி இருந்தும், மு.காவுக்கு இரண்டு ஆசனங்களே கிடைக்கப் பெற்றது. அதனடிப்படையில் முதலாம், இரண்டாம் நிலை வாக்குகளை பெற்ற ஹரிஸ், பைசால் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்றது. மன்சூர் கல்முனைத் தொகுதி, பொத்துவில் தொகுதியில் பெருமளவு வாக்குகள் பெறாததாலேயே தன் ஆசனத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு முழுப் பொறுப்பும் மன்சூரினுடைய கடந்த ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியும் வாக்களித்த மக்களுக்கு அவர்களுக்கான அபிவிருத்தியை குறிப்பிடுமளவு செய்யாமையையும் பிரதானமாக காரணமாகும்.

அ.இ.ம.காவை பொறுத்தவரை மீண்டும் மாஹிரையே களம் இறக்கும். மாஹிரைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் அ.இ.ம.கா ஒரு ஆசனத்தை பெறும் என்ற நிலையில், அனைவரும் பெரும் போட்டியாக கருதப்பட்டவரே மாஹிர். ஆனால் மாஹிருடைய தோல்விக்கு அவருடைய அசமந்த போக்கு மிகப் பிரதானமாக காரணமாகும். அத்தோடு மாஹிரின் தேர்தல் கள நிலையின் அனுபவக் குறைப்பாடும் ஒரு காரணமாகும்.

கடந்த முறை நாம் பாராளுமன்ற ஆசனத்தை தவற விடுவதற்கு எவைகள் காரணமாக அமைந்ததோ, அவைகள் எதுவும் இன்னும் சீர் செய்யப்படவில்லை. மீண்டும் அதே பல்லவியை தான் அவதானிக்க முடிகிறது. இம் முறையும் நாம் பாராளுமன்ற ஆசனத்தை தவற விடுவோமாக இருந்தால், அது வரலாற்று தவறாகவே அமையும். எல்லோரும் சம்மாந்துறை மண்ணின் ஆசனத்தை காக்க ஒரு குடையில் ஒன்றிணைவோமாக.


முஹம்மட் மனாசிர்,
சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :