சம்மாந்துறையில் பல்லின மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ஏடு தொடங்கி வைத்தார் எஸ்.எம். சபீஸ்நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை கல்வி வலய கமு/சது/ தாஹிரா வித்தியாலயத்தில் புதிய வருடத்துக்கான ஏடு தொடங்கும் விழா இன்று அப்பாடசாலையின் அதிபர் எம்.ஏ. ஆர்.எம். முஸ்தபா தலைமையில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம் சபீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஏடு தொடங்கி வைத்தார்.
இப்பாடசாலையில் பல்லின மாணவர்கள் கல்வி பயில்வதோடு அங்குள்ள மாணவர்கள் தமிழ் சிங்கள மொழிகளில் கல்வி கற்பது மாத்திரமல்லாமல் சரளமாக இருமொழிகளிலும் பேசக்கூடியவர்களாக காணப்படுவது சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்வி பணிமனை அதிகாரிகள், சம்மாந்துறை சூரா சபை மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :