அல்ஹிலால் வித்தியாலய வித்தியாரம்ப விழா.
ல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய 2024ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்படும் சிறார்களுக்கு முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் "வித்தியாரம்ப விழா" சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் சமூக சேவகருமான பொறியியலாளர் எம்.சி கமால் நிஷாத், கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியக பணிப்பாளர் சபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.சர்ஜூன் அத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஆரம்பக்கல்வி நோக்கங்கள் தொடர்பாகவும், ஆரம்பக்கல்வி கலைத்திட்டம் தொடர்பாகவும் தரம் ஒன்றிற்கு உள்வாங்கப்பட்ட பெற்றோருக்கு அறிவூட்டும் சிறப்பு உரைகளும் இடம்பெற்றன.

இதில் கலந்து கொண்ட அதிதிகளால் மாணவர்களுக்கு ஏடு தொடங்கும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றதுடன், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை,சிரேஷ்ட மாணவர்களின் கலை நிகழ்சிகள் விஷேட அம்சமாக அமைந்திருந்தன.

நிகழ்வின் ஒரு அங்கமாக, மாணவர்களின் நலன்கருதி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான ஒரு நூல்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரும் சமூக சேவகருமான பொறியியலாளர் எம்.சி கமால் நிஷாத் அவர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :