சம்பள நிர்ணய சபை தொழிலாளர் பிரதிநிதிகளுடன் சௌமிய பவனில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்



2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை, இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (28.02.2024) இ.தொ.கா தலைமையகமான சௌமிய பவனில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைப்பெற்றது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும், சம்பள நிர்ணய சபையில் எமது கோரிக்கைகளை எவ்வாறு முன்வைக்கப்படல் வேண்டும் என்பதையும் இச்சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பில் தேயிலை உற்பத்திக்கான சம்பள சபையின் அங்கத்தவரும், சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, இறப்பர் பயிரிடல் பதனிடல் சம்பள சபைக்கான அங்கத்தவரும் உபதலைவருமான எஸ்.இராஜமணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் எஸ்.பி விஜயகுமார், ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி சந்திரசேன, செங்கோடி சங்கத்தின் சார்பில் திருமதி.வி.ராஜலக்சுமி, ஸ்ரீலங்கா பொதுஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிறிமான ஹெட்டிகே சாந்த, ஜே.எஸ்.எஸ் சங்கத்தின் சார்பில் ஜே.ஏ.டி நிஸாந்த புஸ்பகுமார ஆகியோர் இதில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடக செயலாளர்
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :