திருகோணமலையின் ஊடகத்துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த அமரர் சின்னையா குருநாதனின் 85 வது அகவை தின நிகழ்வும், அவர் நினைவேடு பற்றி எழுதப்பட்ட ''நானும் குருநாதனும்'' தொகுப்பு நூல் வெளியீடும் திருகோணமலை நகராட்சிமன்ற பொது நூலக கேடபோர் கூடத்தில் (11) இடம்பெற்றது.
அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலும் நினைவுப் பகிர்தலின்போது, அமரர் சின்னையா குருநாதனின் நினைவுகள் பற்றிய பல விடயங்களை இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரினாலும் பேசப்பட்டது.
இந்நிகழ்வின்போது, திருமலையின் மூத்த ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ''நானும் குருநாதனும்'' என்ற நினைவேட்டு நூலினை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் வழங்கி வைத்தார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 comments :
Post a Comment