அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழக 40 வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஜொலிபோய்ஸ் சம்பியன் கிண்ணத்தை ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்தது.எம்.எம்.றம்ஸீன்-
க்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழக 40 வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் நடாத்தப்பட்ட இறுதிப் போட்டியில் பள்ளிக்குடியிருப்பு றஹிமியா அணியினை எதிர்கொண்ட ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

32 கழகங்களை உள்ளடக்கி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பள்ளிக்குடியிருப்பு றஹிமியா அணிக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பள்ளிக்குடியிருப்பு றஹிமியா அணி 8 ஓவர் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் அணி 6.2 ஓவர் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றனர்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஒலுவில் இலவன் ஸ்டார் அணியின் மலீக் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக ஒலுவில் இலவன் ஸ்டார் அணி வீரர் சிபான் தெரிவு செய்யப்பட்டார்.

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழக தலைவரும் கணக்காளருமான புனிதராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் தலைவர்கள் சிரேஸ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நிலையினை பெற்ற பள்ளிக்குடியிருப்பு றஹிமியா அணிக்கான வெற்றிக்கிண்ணத்தையும் 30 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் ஜொலிபோய்ஸ் அணியின் முன்னாள் வீரரும் பிரபல வர்த்தகருமான ஆரியதாச டட்லி வழங்கி வைத்ததுடன் சம்பியன் கிண்ணத்தையும் 50 ஆயிரம் ரூபா பணப்பரிசையும் பிரதம அதிதி பிரதேச செயலாளர் வி.பபாகரன் வழங்கி வைத்தார்.

இதேநேரம் இச்சுற்றுப்போட்டி தொடரை நடாத்திய ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகம் 2023 ஆம் ஆண்டில் 7 தொடரில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :