சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வும், கருத்துக்களமும்.நூருல் ஹுதா உமர்-
னித அபிவிருத்தி தாபனத்தினால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் கனடா பங்காளர் நிறுவன அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்றிட்டம் (NLEAP)அம்பாறை மாவட்டத்தில் சகவாழ்வுச் சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக சகவாழ்வு சங்கங்கள் ஒன்றிணைந்த கலாச்சார நிகழ்வும், கருத்துக்களமும் கல்முனை கிரிஸ்டா இல்லத்தில் மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட உதவி இணைப்பாளர் எம்.ஐ. றியால் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.

கலாச்சார நிகழ்வுகளுடன் கூடியதாக நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அப்துல் அஸீஸ் உட்பட பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், இளைஞர் சமூக அமைப்புக்களின் பிரதானிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், மத போதகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் ஊடாக சகவாழ்வு சங்கங்களின் இயலுமையை மேம்படுத்தி அதன் ஊடாக மொழி உரிமைகள், மொழிக்கொள்கை அமுலாக்கம், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்தல் போன்றவற்றை இலக்காக கொண்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வானது பல்லின சமூகங்களின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும், பிராந்தியத்தில் சமூக ஒருமைப்பாடு, இரண்டாம் மொழி கல்வியின் முக்கியத்துவம், மொழிக்கொள்கை அமுலாக்கத்தின் நிலமைகள் தொடர்பான கருத்துக்களமாகவும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :