மருதமுனை சைல்ட் பெஸ்ட் (CHILD FIRST ENGLISH COLLEGE) ஆங்கிலக் கல்லூரியின் 18வது ஆண்டு நிறைவும்,பாடசாலை தின நிகழ்வும்,எதிர்வரும் சனிக்கிழமை(05-03-2023)மாலை 3.45 மணிக்கு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மருதமுனை சைல்ட் பெஸ்ட் (CHILD FIRST ENGLISH COLLEGE) ஆங்கிலக் கல்லூரியின் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும்,ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் விழா நடைபெறவுள்ளது.
இங்கு சிறப்பு அதிதிகளாக இலங்கை கடற்படையின் கல்முனை முகாம் கட்டளைத் தளபதி தம்மிக்க ஏக்கநாயக்க.தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார்,சீ.ஐ.சீ பிரைவட் லிமிட்டட் பிரதேச விற்பனை முகாமையாளர் எம்.பி.பௌக் ஆகியோருடன் பலர் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்வுள்ளனர்.
0 comments :
Post a Comment