இங்கு அண்மையில் நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளைப் பெற்று; வலைய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்ற மாணவன், ஏ.ஜி.எம்.அஹ்னாப் உள்ளிட்ட மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ சம்சுடீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறுகிய காலத்தில் கல்முனை கல்வி வலயத்தில் குறித்த இப்பாடசாலை அடைந்துள்ள வரலாற்று சாதனைகள், பாடசாலையின் கல்வி மற்றும் கல்விசாரா ஏனைய சாதனைகள் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார். தொடர்ந்தும் பாடசாலையில் உள்ள பௌதீக வளங்களை மேம்படுத்த அரச நிதிகளை மட்டும் நம்பிக்கொண்டிராமல் பழைய மாணவர்கள், தனவந்தர்கள், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை கொண்டும் நலன்விரும்பிகளை கொண்டும் எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு பிரதேச மும்மாதிரிகளை எடுத்துக்காட்டி பேசினார்.
மாணவர்களை கௌரவித்த இந்நிகழ்வின்போது கல்முனை கல்வி வலையத்தில் நீண்ட காலமாக கடமையாற்றும் ஏ.சஹறுன் அவர்கள் எதிர்வரும் மாதமளவில் ஓய்வு பெற்றுச்செல்லவுள்ளதால் பாடசாலை சமூகத்திரலால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது விஷேட அம்சமாக இருந்தது.
தரம் ஐந்து புலமை மொட்டுக்கள் பாராட்டப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை கல்விமாவட்ட பொறியலாளர் ஏ.எம். ஸாகீர் கௌரவ அதிதியாகவும், வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்று பொறியலாளர் எம்.எம்.எம். முனாஸ், கல்முனை கல்விவலய உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலிக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் மேலும் பல கல்வி அதிகாரிகள், சாய்ந்தமருது, கல்முனை கோட்டங்களின் ஏனைய பாடசாலை அதிபர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment