மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா



லையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டன் CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திர்ரேக்கா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக " வெளிநாட்டில் பணிப்பெண் வேலை : பிரச்சினைகளும் சவால்களும்" ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை ) எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்றினார். 'தூரத்துப் பச்சை' நாவலாசிரியராக மட்டுமே அறியப்பட்ட கோகிலம் சுப்பையாவின் அரசியல் - சமூக - இலக்கிய வாழ்க்கைக் குறித்த வகிபாகத்தையுத்தையும் விழா நடைபெற்ற CSC மண்டபத்தில் நிறைவேற்றப்பட்ட ஹட்டன் தீர்மானம் பற்றியும் வரலாற்று ரீதியான விளக்கங்களுடன் உரையாளர் பேராசிரியர். பஸீஹா அசிம் குறித்த
அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்கிவைத்தார் .

பேராசிரியர் பஸீஹா அசிம் மாவனல்லையை பிறப்பிடமாக கொண்டவர் புவியியல் துறையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர் தனது முதுமாணி மற்றும் இரண்டு கலாநிதிப் பட்டங்களை நோர்வே நாட்டின் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்து தற்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுகிறார்.

வெளிநாட்டில் பணிப்பெணகளாக வேலைக்குச் செல்வதனால் ஏற்படக்கூடிய தனிப்பட்ட, குடும்ப, சமூகச் சவால்களை முறைசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள அவர் மிகவும் உணர்வுப்பூர்வமாக தனது கருத்துகளை முன்வைத்தார்.

உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தில் களத்தில் இந்த விடயதானத்தில் செயற்பாட்டாளர்களாக இயங்கும் பெண் செயற்பாட்டாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் .

அத்தகைய பெண் செயற்பாட்டாளர்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட 14 பெண் செயற்பாட்டாளர்களை 'மலையகப் பெண் சாதனையாளர்கள்' கௌரவமும் புத்தகங்களும் வெகுமதியாக வழங்கி வைக்கப்பட்டது.

பெண்கள் அரங்கத்தின் தலைவி சந்திர்ரேக்கா மலர்ச்செண்டு வழங்கி அவர்களை வரவேற்க பேராசிரியர் பஸீஹா பாராட்டுப் பத்திரங்களை வழங்கி வைத்ததுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகர் புத்தகங்களை வெகுமதிகாளாக வழங்கி வைத்தார்.

பேராசிரியர் பஸீஹா அசிம் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக நினைவுச் சின்னத்துடன் சட்டவாளர் யோகேஸ்வரி விஜயபாலன் எழுதிய 'Endless Inequality ' எனும் நூல் சிறப்புப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.

நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்கியதுடன் நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்தளித்தார்.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :