அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களைக் கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலை குழுத் தலைவர் டொக்டர். எம்.ஏ.றக்கீஸ்து தலைமையில் (28) நடைபெற்றது.
இந் நிகழ்வில், வைத்திய சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் ரஜவெல்லே சுபூதி தேரர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எச்.எம். சனூபரிடம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்களை கையளித்ததுடன், அவற்றில் சில மருத்துவ உபகரணங்கள் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை
பிரதேச வைத்தியசாலைகள் மற்றும்
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment