இறக்காமம் கோட்டத்தில் இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா நேற்று (31) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பாராட்டி கௌரவித்தார்.
இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் 106 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அதில் 23 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றிருந்தார்கள்.
இறக்காமம் கோட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளியாக 158 புள்ளிகளை அதே பாடசாலையைச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா மற்றும் எம்.ஆர்.ஷஹீட் ஆகியோர் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
அவர்களை விசேடமாக கைலாகு கொடுத்து பாராட்டி கௌரவித்தார்.
அதிபர் எம்.ஏ.பஜீல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment