அல் குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தலைவர் முகம்மத் பாறூக் தலைமையில் இடம்பெற்றது.
மௌலவி அல்காரி அஷ் ஷெய்ஹ் இப்ராஸ் பாஹவி ஹஸரத் அவர்களின் முயற்சியின் பேரில் சுமார் 106 மதரிஸா மாணவர்களுக்கான குறித்த குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் SAC..நஜிமுதீன் அவர்கள் கலந்து கொண்டதுடன்,ஒன்றியத்தின் ஆலோசகர், கிராம சேவை உதியோகத்தருமான MSM.இப்றாஹீம்,ஆசிரியர் இம்றாஸ், நீர் வழங்கள் வ.சபை உத்தியோகத்தர் சிக்கன்தர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
குர்ஆன் பிரதிகளை பெரும் மனம் கொண்டு வழங்கிவைத்த அந்த பெருந்தகைகளுக்காக விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment