அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளுக்கு எதிராக பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடரில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் போதைப்பொருளுக்கு எதிரான விசேட கூட்டமொன்று புதன்கிழமை (1) இடம்பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக இஸ்லாமிய மார்கம் போதித்துள்ள விடயங்கள் பற்றி கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.றிஸ்வி மஜீதி, போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளை தடுக்க சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.முகம்மட் ராசிக், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர், பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர்கள், பிரதேச பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையாளர்களுக்கு எதிராக பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது.
0 comments :
Post a Comment