இலங்கை திருநாட்டின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பிரதேசங்களில் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்று வருகிறது.
காரைதீவு மாளிகைக்காடு மாவடிப்பள்ளி ஆகிய பிரிவுகளில் சிரமதான நிகழ்வுகளும்,காரைதீவு மயானத்திற்கு அருகாமையில் மரங்களுக்கு வேலி அமைக்கின்ற நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சுகாதார அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் ,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர் ,அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகம் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதஸ்தலங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments :
Post a Comment