காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் மீண்டும் களத்தில். தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்.



வி.ரி.சகாதேவராஜா-
திர்வரும் ஊராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபை க்கு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் வீட்டுச் சின்னத்தில் களமிறங்கி உள்ளனர்.

தமிழரசுக் கட்சி வேட்பாளர் குழுவில் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், முன்னாள் உதவி தவிசாளர் கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி, மாவடி கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சின்னத்தம்பி சிவகுமார், ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர் திருமதி தவகுமாரி சிவஞானசீலன் ,சமூக சேவையாளர்களான குணராசா மயூரன், கனகசுந்தரம் லோகநாதன், அழகையா ஜெகநாதன் ஆகியோர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

இரண்டாவது பட்டியலில் சீனித்தம்பி நளினி, முருகேசு நேசராணி, புஸ்பநாதன் கல்பனா ,சுப்பையா கணேஷ், கிருஷ்ணவேணு தனுஜியன் ,தங்கராஜா ஜெயவினோதன், நவசேகரம் ஜயந்த் ஆகியோர் இடம் பெறுகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :