சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஷ்டிப்பு.



வி.ரி. சகாதேவராஜா-
ர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும், பிரதேச மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

"சமத்துவமான உலகத்தை வளர்ப்பதில் புத்தாக்கத்தின் வகிபங்கு உள்ளடங்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகள்" எனும் தொனிப்பொருளில் அமைந்த இந் நிகழ்வில் சிமிர்னா விசேட தேவையடைய பிள்ளைகள், "புகலிடம் " விசேட தேவையடைய பிள்ளைகள் மற்றும் மட்/பட் /மகிழூர்முனை சக்தி வித்தியாலய விசேட தேவையடைய மாணவர்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட நிகழ்வுகள் கலந்துகொண்டோர் அனைவரினதும் பாராட்டுதல்களை பெற்றது.

இதன் போது முன்மாதிரியான சர்வதேச பெண் தலைமைத்துவ விருதினை பெற்றமைக்காக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மாற்று திறனாளிகள் சங்கத்தினரால் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் இ. கிருபாகரன், களுதாவளை பிரதேச சபை செயலாளர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக சேவை) திருமதி. க .மனோகரன், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக சேவை) திருமதி அ . சந்திரகுமார், மாவட்ட மாற்று திறனாளிகள் சங்க தலைவர், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மாற்று திறனாளிகள் சங்கத்தினர், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :