கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்களாகயிருந்து,இவ்வாண்டு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள், வருடாந்த பொதுக்கூட்டத்தில் பாராட்டிக் கொரவிக்கப்பட்டனர்.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கழக தலைமையகத்தில் நடைபெற்றபோதே இக்கெளரவிப்பு இடம்பெற்றது.
மே.கஜன், எம்.ராகுலன் , ஜெ.கோசரன் , சி.தனோசன் ஆகிய கழக வீரர்கள் பல்கலைக்கழத்திற்கு தெரிவானதையொட்டி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
அதிதிகளாக கழகப் போசகர்களான காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் டாக்டர்.ம.ரமணன் ஆகியோர் கலந்துகொண்டு மேற்படி நால்வரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினர் .
0 comments :
Post a Comment