செந்நெல் சாஹிராவில் 2 கோடி ரூபா செலவில் கணித ஆய்வுகூடம்!வி.ரி. சகாதேவராஜா-
ல்வி அமைச்சின் GEMP நிகழ்ச்சி திட்டத்தின்கீழ், சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட சம்மாந்துறை செந்நெல் சாஹிரா கல்லூரியில் கணித ஆய்வுகூடம் அமைக்கப்பட்டு வருகிறது .

இதற்கென 2 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடியாக அமையவுள்ள இந்த ஆய்வுக்கூடத்தில், முதல் மாடிக்காக இந்த இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் .எம் .எம் .அமீர் இதற்கான அடிக்கல்லை அண்மையில் நட்டு வைத்தார்.

கல்லூரி அதிபர் யூ.கே. எம் .இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :