GUIDE கல்வி நிலையத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்



“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் “எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நிலையத்தின் பணிப்பாளர் K.L பாயிஸ் தலைமையில் 01.10.2022 ம் திகதி சாய்ந்தமருது GUIDE கல்வி நிலைய வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் நிலையத்தின் பணிப்பாளர் K.L பாயிஸ், உதவிப்பணிப்பாளர் M.H.M றிபியான், ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் , விளையாட்டு போட்டிகள் என பல நிகழ்வுகள் இடம்பெற்றதோடு நிகழ்வில் பங்குபற்றிய, போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் பரீட்சையில் திறமைகாட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :