மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மீட்புபாறுக் ஷிஹான்-
றைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்காரபுரம் பகுதி வீடு ஒன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதானார்.

இச்சம்பவம் இன்று முற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மல்வத்தை விசேட அதிரடி படையினர் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கிலோ 600 கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இடம்பெற்ற தேடுதலில் சந்தேகத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :