இந்துக்களின் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று(30) ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற இருக்கின்றது.
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம், கடந்து இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு சிறப்பாக அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் இடம் பெற்று வந்த கந்தசஷ்டி விரதம் இன்று சூர சம்ஹாரத்துடன் நிறைவு பெறுகின்றது.
வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலய வளாகத்தில் சூரசம்ஹாரம் இடம் பெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

0 comments :
Post a Comment