கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளருக்கு இந்தியாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது"!



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இன்று(15) சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இந்தியாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறது.

பிசினஸ் குளோபல் இன்டர்நேஷனல்( Business Global International Conference and awards ceremony) என்கின்ற அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற இந்த பாராட்டு விழாவில் ஆசியாவின் பல பாகங்களிலும் இருந்து சமூக சேவை ஊடாக கல்வி சுகாதார மற்றும் பல துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது .

இந்தியா சென்னையிலுள்ள சஃபாரி கிறான்ற் விடுதியில் BGIA Awards வைபவம் நடைபெறுகிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் சமூக, கல்வி சேவைக்காக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இந்த "வாழ்நாள் சாதனையாளர் "விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து கிழக்கு மாகாண கல்வி செயலாளர் திசாநாயக்க உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து விருது பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :