சாய்ந்தமருது அல்-ஹிலாலில் ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவ முகாம்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்றினை சாய்ந்தமருது டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை (11) ஒழுங்கு செய்திருந்தது.

இம் மருத்துவ முகாமில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் சகல ஆசிரியர்களும் இரத்தப் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனைகள் போன்ற சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.

மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பணிப்பாளர் றிஸான் ஜெமீல் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார், பிரதி அதிபர் ரிப்கா அன்ஸார் உட்பட உதவி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் நன்றி தெரிவித்ததோடு, இவர்களது அர்ப்பணிப்பான இச்சேவைக்கு பாராட்டுக்களோடு, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் யூ.எல்.நஸார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :