திருகோணமலை மாவட்ட தொழில் நிலையத்தினால் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் சந்தை இடம் பெற்றது.
குறித்த தொழிற் சந்தையானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இன்று (06.) இடம் பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இளைஞர் யுவதிகள் தொழிலற்ற நிலையில் உள்ளார்கள். இதனை கருத்திற் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் தனியார் துறை வேலை வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்க்கும் பொருட்டு திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் மூலமாக தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில் சந்தையில் பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் நேர்முகத் தேர்வில் பங்கு கொண்டார்கள்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வதிலும் இளைஞர்களின் பங்கு அளப்பரியது இதனால் இளைஞர்கள் இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி இதன் போது தெரிவித்தார்.
இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ உதவியாளர் மஹிந்த வனசிங்க, மனிதவள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் முபாரக், பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.புரபானந்தன் உட்பட தனியார் நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment