சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரிவில் உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸ்ஸமில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.ஏ.சி.ரமீஸா, முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.எம்.மஜுத், திட்ட முகாமையாளர் ஏ.சி.எம்.சரீப், வலய சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் குடும்பங்களில் உயர்தரக் கல்வியைத் தொடர்கின்ற 144 மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக மாதாந்தம் ஆயிரத்தி ஐநூறு (1500.00) வீதம் இரண்டு வருடங்களுக்கு சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment