விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவை இன்று (20) திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் முதன் முறையாக கூடியது.
இங்கு பாடசாலை மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு வீராங்கனைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வரை அவர்களை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பாடசாலைக் காலம் முடிவடைந்த பின்னர் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்தத் திறமை வாய்ந்த விளையாட்டுப் பெண்களை சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் செய்வதற்கும் அவர்களின் நலனுக்காக மாகாண விளையாட்டுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, மாகாண விளையாட்டு சபையை அமுல்படுத்துவது தொடர்பில் ஏதேனும் யோசனைகள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்திற்குள் மாகாண விளையாட்டு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் இதன் போது ஆலோசனை வழங்கினார்.
இந் நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க , ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி திஸாநாயக்க, மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் மற்றும் மாகாண விளையாட்டு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment