இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஜெய்லாணி தேசிய பாடசாலை மற்றும் கனகநாயகம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த தரம் 6, தரம் 7 மாணவ மாணவிகளுக்கான "சதுரங்க பயிற்சியும் அறிமுகமும்"
நிகழ்ச்சி திட்டத்தின் 2ஆவது கட்டம் கடந்த 17, 18, 19 ஆகிய தினங்களில் ஜெய்லானி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறந்த முறையில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு வளவாளராக அம்பாறை மாவட்ட சதுரங்க விளையாட்டில் அமைப்பாளர் ஏ.எம்.ஸாகிர் அஹமட் , கனகநாயகம் மகா வித்தியாலய
உடற்கல்வி ஆசிரியர் இன்ஸாப் ஷா முஹம்மட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து பாடசாலையில் ஆரம்ப கட்டத்தில் முதலாவதாக பயிற்சி வழங்கப்பட்ட சதுரங்க மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களின் அடைவு மட்டத்தை அறிவதற்காகவும், மாணவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கிலும்
JNS OPEN CHESS CHAMPIONSHIP-2022 எனும் தலைப்பில் இரண்டு நாள் சதுரங்க போட்டிகள் நடாத்தப்பட்டு முதல் 5 இடங்களை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment