கலாநிதி. ஶ்ரீ ஞானேஸ்வரன் எழுதிய பன்னாட்டு குற்றங்கள் நூல் வெளியீடு



ஹஸ்பர்-
லாநிதி. ஶ்ரீ ஞானேஸ்வரன் அவர்களால் எழுதப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் (International crimes) எனும் நூலானது இன்று( 11) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையிலுள்ள ஜுபிலி மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
காலை 10 மணியளவில் சுடரேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிழ்வினை திருகோணமலை மாவட்ட ஆயர் வண.கலாநிதி. நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையைத் தொடர்ந்து வருகையாளர்களுக்கு நூல்கள் கையளிக்கப்பட்டன .

யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியற்துறைத் தலைவர் பேராசிரியர் நூலினை மதிப்பாய்வு செய்து உரையாற்றியதுடன் இந்நூலின் முக்கியத்துவம் பற்றியும் தன் உரையில் குறிப்பிட்டு பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து நூலாசிரியரின் ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்றது. இந்நூலானது ஆங்கிலம், ஜேர்மன், டொச் மற்றும் சிங்களம் முதலான மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது பற்றியும் நூலாசிரியர் தன் உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வை ஊடகவியலாளர் ச. திருச்செந்தூரன் தொகுத்து வழங்கியதுடன் வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தமையும், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.சி. தண்டாயுதபாணி முதலான அரசியல் பிரமுகர்கள், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். சிறீதரன், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :