அல்- ஹம்றா வித்தியாலத்திலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு !நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/ அல்- ஹம்றா வித்தியாலத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10) பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் தலைமையில் பாடசலை கேட்போர் கூடத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறாமல் இருந்த 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கோலாகலமான முறையில் மாணவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் கலந்துகொண்டார். மேலும் விசேட அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவியும், மருதமுனையின் முதல் பெண் சிவில் நிர்வாக சேவை அதிகாரியுமான, உதவி பிரதேச செயலாளர் அய்மா நிஹ்மதுல்லாவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம் ஆகியோர் கலந்து கொண்டார்.

மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்த பாராட்டு விழாவில் அரங்கம் நிறைந்த கல்வியலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பாடசாலை பிரதி மற்றும் உப அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், மாணவர்களின் பெற்றோர், மாணவ, மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :